தமிழ் மக்களுக்குள் ஒரு கூட்டணி உருவாகுமானால் அது அனைத்து தரப்பினரும் இணைந்தே உருவாக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி முதலான கட்சிகள் ஒன்றிணைந்து நேற்றையதினம் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது.

 குறித்த கூட்டணியில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வினவியபோதே விக்னேஸ்வரன் குறித்த விடயத்தை தெரிவித்தார்.