அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை  27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.
இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது, இதற்கான காரணம் அரசின் ஆயுட்காலம் ஓரிரு மாதங்கள் தான் என்றும் மறுப்பக்க மஹிந்த கூட்டில் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை என்பதானேலேயே ரணிலுக்கு ஆதரவு வழங்கியதாக சபையில் உரையாற்றினார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்.