புதிய குரல் மட்டு நிருபர் நடேசன்

பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் தினப் போட்டியில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய மாணவி கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி உள்ளார் என பாடசாலை அதிபர் ம.சிவசுந்தரம் தெரிவித்தார்.

 மாகாண மட்ட தமிழ் தினப் போட்டியில் உயர் நிலை பிரிவில் கவிதை ஆக்கத்தில் கு.டிலோச்சனா என்ற மாணவி தோற்றுவித்து முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தினை வெற்றிவாகை சூடி தேசிய மட்டதுக்கு தெரிவாகி உள்ளார்.

 எமது பாடசாலைக்கும், கல்குடா கல்வி வலயத்துக்கும் பெருமையினை பெற்றுத் தந்த மாணவியை பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிபர் மேலும் தெரிவித்தார்.