ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு.சதீக்

மட்- மம மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் திருத்தம் செய்யப்பட்ட கட்டிடத்தை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ் எம் எம் எஸ் உமர் மௌலானாவில் திரை நீக்கம் செய்து  மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக திறந்து வைத்தார்.
மட் மம மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய ஒரு 1AB பாடசாலையாக இருந்தும்  பௌதீக வளப்பற்றாக்குறையான பல வருடகாலம் பழைமை வாய்ந்த கட்டிடங்கள்,மற்றும் தளபாட பற்றாக்குறைகள் ,இங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அறைக்கான பொருட்கள் இன்மை. என்பவற்றை இ;ப்பாடசாலை ஆசிரியர்களால் வலயக்கல்விப்பணிப்பாளருக்கு சுட்டிகாட்டப்பட்டது.
இப்பாடசாலைக்கு எதிர்காலத்தில் தன்னால் முடிந்த பங்களிப்பினை வெகுவிரைவில் வழங்குவதாகவும்.,அதற்கான தேவைப்பட்டியலையும் வலயக்கல்விப்பணிமனைக்கு அனுப்புமாறும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா கூறினார். 
 இப்பாடசாலையின் அதிபர் யூ.எல் முபீன் அவர்களின் வழிகாட்டலிலும்.இப்பாடசாலையின்  பகுதித்தலைவர் எம்.பீ.எம் சனூஸ் ஆசிரியரின் நெறிப்படுத்தலிலும் இப்பாடசாலை ஆசிரியை ஜனாபா எஸ்.ஏ ஹைறுன்நிசா அவர்களின் மேற்பார்வையிலும் மட்- மம மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பல வருட காலமாக  திருத்தம் செய்யப்படாமல் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தை   பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  பங்களிப்பின் மூலம் திருத்தம் செய்யப்பட்டு அந்த கட்டிடம் இன்று மாணவர்களின் ஆன்மீகத்தை வளர்ப்படுத்தக்கூடிய தொழுகை அறையாகவும் மற்றும் மனையியல் பாட அறையாகவும், கணித பாட செயன்முறை அறையாகவும் , தகவல் தொழிநுட்ப பாட அறையாகவும்   அங்குள்ள ஆசிரியர் குழாம் மாற்றியுள்ளது.இப்பாடசாலையின் மனையியல் பாட ஆசிரியை ஜனாபா எம்.எம்.ஈ அஸ்மியா அவர்களின் வழிகாட்டலில்  மாணவர்களினால் மரக்கறி மற்றும் உணவுப்பொருட்களால் அலங்கார பொருட்கள் செய்யப்பட்டிருந்தது.
இவ்வைபவத்தில் முன்னாள்  பிரதேச சபையின் தவிசாளர் கே.பீ.எஸ் ஹமீட் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் வீ,ரீ அஜ்மீர் ,பெற்றோர்களும் பங்குபற்றியிருந்தனர்