முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உடன் பதவிதுறந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட்டமை அனைவரும் அறிந்ததே, இதில் முக்கிய விடயம் என்னவெனில் அமைச்சர் றிாத் பதியுதீனை நீக்குமாறு கோரியே பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் போராட்டம் நடாத்தினார், ஆனால் அமைச்சர் றிசாதுக்காக அனைத்து அமைச்சர்களும் பதவி துறந்து ஒற்றுமையினை வெளிக்காட்டினர்.

பதவிதுறந்த  அமைச்சர் கபீர் ஹசீம், அமைச்சர் ஹலீம் ஆகியோர் முதற்கட்டமாக பதவிகளை ஏற்றனர், பின்னர் மீதமிருக்கும் அமைச்சர்கள் பதவிகளை ஏற்க தயாராகியுள்ளனர், பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துள்ளதாக குறிப்பிட்டே அனைவரும் பதவிகளை ஏற்கவுள்ளனர்.


உண்மையில் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது. இதில் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வீண்பழிகள் தீர்க்கப்பட்டுள்ளமை , அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட பழிகள் தீர்ந்துள்ளமை , முஸ்லிம்களின் உரிமைகள்  மீள கையளிக்கப்பட்டுள்ளமையில் திருப்தி கண்டுள்ளதாக முஸ்லிம் உறுப்பினர்கள் உணர்ந்தமையினாலேயே மீள பதவியை துறக்க சம்மதித்துள்ளனர்.