தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைத்தால் நாளை மாலை ஆட்சி மாற்றம் இடம்பெறும் என  ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக தெரிவித்துள்ளார்,

தமிழர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறாத நிலையில், தமழர்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் நாளை பாராளுமன்றில் அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது, இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நினைத்தால் ஆட்சியை மாற்ற முடியும்., ஜே.வி.பி உள்ளிட்ட பல கட்சிகள் அரசுக்கெதிராக வாக்களிக்கவுள்ளனர், சில வேளையில் முஸ்லிம் கட்சிகளும் அரசுக்கு எதிராக வாக்களிக்கும்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.