புதிய குரல் அரசியல் புலனாய்வு செய்தியாளர் மணி

2020 ஜனவரி முதல்வாரம் முதல் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபய ராஜபகஷ ஆட்சி செய்வார் என பெரும்பான்மை சிங்கள மக்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர், கடந்த கால தேர்தல்களை விட இம்முறை சிங்கள பெரும்பான்மை மக்கள் அதிகம் வாக்களிப்பர் என நம்பபடுகிறது.

தமிழ், முஸ்லிம் மக்களின் 60 வீதமானோர் எதிர்த்தாலும் மீதி 40 வீதமானோர் ஆதரிக்கவுள்ளதாக மொட்டு கட்சிக்கு விசுவாசமான தமிழ் பேசும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர், அதனடிப்படையில் வடக்கில், விக்னேஸ்வரன், கஜேந்திர குமார் அணி மொட்டுவை ஆதரிக்கவுள்ளதாக நம்பப்படுகிறது, அத்தோடு கிழக்கில் கருணா அம்மான், வியாழேந்திரன் உள்ளிட்டவர்களும் முஸ்லிம் தரப்பில் அதாஉல்லா, பசீர் சேகுதாவூத் ஆகியோரும் ஆதரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, எவ்வாறிருப்பினும், ஹக்கீம் மற்றும் ரிசாத் ஆகியோர் ரணில் பக்கமே இருப்பர் என்றாலும் பசில் ராஜபஷ அவர்கள் றிசாத்தை மொட்டு பக்கம் இணைக்க எத்தனிப்பார் எவ்வாறிருப்பினும் பலமான சிங்கள வாக்குகளுடன் மொட்டு ஆட்சியமைக்கவுள்ளது.

இதில் வேட்பாளர் யார் என்பதில் பல்வேறுபட்ட சந்தேகம் இருப்பினும், ஏகோபித்த தெரிவில் கோட்டாபய களமிறங்கவுள்ளார்.