இன்று காலை கல்முனை தமிழர் போராட்ட களத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கலபொட ஞானசார தேரரின் வருகை தந்தார், பேராட்டத்தை நிறைவு செய்யுமாறு பணித்த அவரின் வேண்டுகோளினை ஏற்று தேரர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இத்துடன் எல்லாம் முடிந்து விடும் என நினைக்கையில் அங்கிருந்த மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட ஒரு சில இளைஞரகள் போராட்டத்தை சுழற்சி முறையில் தொடர்வதாக கூறினர். 

தொடர்ந்தும் குறித்த இடத்தில் ஒரு போராட்டம் இடம்பெறும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பும் ஒருபக்கம் சத்தியாகிரகத்தை முன்னெடுத்து வருகின்றனர். முஸ்லிம்காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் களத்தில் நின்று பிரச்சாரம் செய்வதை காண முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கல்முனை உள்ளிட்ட முஸ்லிம் நகரங்களில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.