விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - மாவட்ட 2019ஆம் ஆண்டிற்கான முதலாவது, அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது 24.06.2019 இன்றைய நாள் இடம்பெற்றது.

இணைத்தலைவர்களில் ஒருவரான வன்னிமாவட்ட பாராளுமன் உறுப்பினர் சிவமோகன், மற்றும் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோரது தலைமையில் இக்கூட்டம், முல்லை மாவட்ட செயலக மானாட்டு மண்டகத்தில் இடம்பெற்றது.


மேலும் இதில் முல்லை மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களானசிவசக்திஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, காதர் மஸ்தான் ஆியோருடன் அரச திணைக்கள அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், காவற்றுறை அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லை மாவட்ட அபிவிருத்திள், குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக நந்திக்கடல் ஆளமாக்கல், கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகள், மீனவர்களுடைய பிரச்சினைகள், மணற்குடியிருப்பில் அமைந்துள்ள மதுபானசாலை மூடப்படுதல் தொடர்பான பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.