புதிய குரல் மட்டு செய்தியாளர் நடேசன் குகதர்சன்


விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மா மரங்களை பயிரிடுவது தொடர்பான செயற்றிட்ட கருத்தரங்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் புஹாரி தோட்டத்தில் இன்று இடம்பெற்றது.தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழான மா மரச் செய்கையால் பசளைப் பாவனையும், நீர்ப்பாசனமும் என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயி ஏ.எல்.புஹாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.சி.வாகீசன், திருமதி.சி.தயாதர, ஏ.எல்.எம்.நலீம், ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது மா மரங்களை பயிரிடுவது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பயிரிடுவது தொடர்பான விளக்க கருத்துக்களை வாழைச்சேனை விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் நிகழ்த்தினார்.