புதிய குரல் செய்தியாளர் பா.சிஹான்

தமிழர்களை காட்டி அமைச்சுப்பதவியெடுத்த வியாழேந்திரன் இன்று கல்முனை தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு இனவாதம் பேசுவது கவலையாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.நசீர் தெரிவித்தார்.

கல்முனையில் முஸ்லிம்கள் முன்னெடுத்துள்ள சத்தியாகிரக போராட்ட களத்தில் பங்குபற்றி உரையாற்றியபோதே இதனை அவர் குறிப்பிட்டார், மேலும் குறிப்பிட்ட அவர்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் அரசியல்வாதிகள் சூடாக்கி மக்களை குழப்ப கூடாது, இன்று கருணா அம்மான் மிகவும் கேவலமான அரசியல் செய்கிறார், அதே போல வியாழேந்திரனும் அப்படியே செய்கிறார். இவர்கள் தமிழ் சடூகத்தை காட்டிக்கொடுத்தவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.