கல்முனையில் இடம்பெற்றுக்கொண்டுவரும் உண்ணாவிரதப்போராட்டம் பிழையானது மட்டுமில்லாமல் அவர்கள் கேட்பதும் பிழையானது முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

இன்று புதிய குரல் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார், மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் சண்டைபிடிக்க கூடாது, இந்த சண்டைகளை பார்த்து நீளமாக சிந்திக்க வேண்டியதுள்ளது, எதிர்கால சந்ததி குறித்து சிந்திக்க வேண்டும். 

இன்று கருணா கருத்துக்களை விசமமாக வெளியிடுகிறார். ஏன் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை சிந்திக்க வேண்டும். நீங்கள் யாரின் உளவாளி என்று எங்களுக்கு தெரியும். கவனமாக சிந்தித்து நடங்கள் என்றார்.