(மருதமுனை, றாசிக் நபாயிஸ்)

கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினராக மருதமுனையைச் சேர்ந்த தாஜுத்தீன் முகம்மது முபாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்கிரமரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. 


கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினராக பதவி வகித்து வந்த ஏ.ஜி.எம்.நதீர் ஆசிரியர் கட்சியின் சுழற்சிமுறை கோட்பாட்டுச் இணங்க இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அக்கட்சியின் செயலாளரினால் புதிய உறுப்பினராக வர்த்தகர் முபாரிஸ் பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான நியமனத்தை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் (24)ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் உறுப்பினர்
நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.