தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்காகவா அல்லது வெளிநாட்டுக்காகவா செயற்படுகிறதென, சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆலோசகரொருவருக்கு அமெரிக்க அரசாங்கம் சம்பளம் செலுத்துவதாகவும் நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும், இவ்வாறு வெளிநாட்டிலிருந்து  சம்பளம் பெறுபவர்கள் இருப்பதாகவும் அவ்வாறனவர்களுள் சிறந்த நிபுணத்துவம் உள்ளவர்களிடமிருந்து, ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தாலும் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து சம்பளம் பெறுபவர்கள் குறித்த நிறுவனங்களில் இருப்பது யாருடைய தேவைக்காக​ என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இன்று கொடிகாவத்த- முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப்  போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.