எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து, மலையகத்தின் புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்த கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களை கொண்டு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணனை கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இந்த கூட்டணியில் அமைச்சர் மனோ கணேசனின் சகோதரர் பிரபா கணேசனும் இணைவதாக உறுதியளித்துள்ளார். பிரபா கணேசன், வகித்து வந்த அரசாங்கத்தின் ஆலோசகர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது நிபந்தனைகளை நிறைவேற்றும் பிரதான கட்சியை ஆதரிக்கும் நோக்கில் மலையக அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.