இலங்கையில் மொழியால் ஒன்றுபட்டிருக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் மத அடிப்படையில் வேறுபடாமல் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களிடத்தில் கேட்டால் மாத்திரமே தீர்வு பெறமுடியும் என கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி அரசியல் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அமர்ந்து பேசுமிடத்து அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிடும் ஏன் அவ்வாறு பேசுவதில்லை என எண்ணத்துாண்டுகிறது.

கடந்த காலங்களில் தமிழ்-முஸ்லிம் உறவு என்பது மிகவும் ஒற்றுமையாக இருந்துள்ளது, இன்று அது விரிசலடைந்துள்ளது காரணம் புரியாமல் இரண்டு சமூகங்களும் சிக்கி தவிக்கிறது, அண்மையில் கல்முனை விவகாரத்தை ஏன் தேரர்கள் கையில் எடுக்கவேண்டும், மூத்த தலைவர் சம்பந்தன் ஐயாவும், ரவூப் ஹக்கீம் அவர்களும் பேசி தீர்த்திருக்க முடியும் ஏன் அவ்வாறு இடம்பெறவில்லை, தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் முஸ்லிம்களின் விவசாய காணிப்பிரச்சினை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடங்களின் தமிழர்களின் மதஸ்தலங்கள் பிரச்சினை என அதிகம் இருக்கிறது இவற்றை ஏன் இன்னும் தீர்த்து வைக்கவில்லை.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து இரு தரப்பும் ஒரு தீர்விற்கு வரவில்லை, இவற்றை பார்க்கையில் வேறுவகையில் சிந்திக்க துாண்டுகிறது. இது குறித்து இரா.சம்பந்தன் ஐயா தெளிவூட்ட வேண்டும் என்றார்.