பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று (16) மாலை வீசிய கடுங்காற்று காரணமாக, 35 வீடுகள் பாதிப்படைந்துள்ளதென என்று, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.
ஹேகொட பகுதியிலுள்ள வீடொன்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன், பதுளுப்பிட்டிய, மெதபத்தன ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இவ்வீடுகளில் வசித்து வந்த சுமார் 132 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை, பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.