முழு முஸ்லிம் சமூகமும் வெட்கி தலை குனிகின்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக நாம் மிகவும் வருத்தமடைகின்றோம். அதே வேளை இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தர பிரஜையாக சித்தரிக்க முயலும் இனவாதிகளை எக்காரணம் கொண்டும் முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது. என பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் சற்று முன் உரையாற்றினார்.
மேலும் அவர் கூறுகையில்...
காத்தான்குடி, ஏறாவூர், அழிச்சிப்பொத்தானை போன்ற ஊர்களில் முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள் தம்மை இன்று பாலகராக சொல்லிக் கொள்ள முனைவது, இந்த நாட்டின் இன்றைய பாதுகாப்புடன் தோலோடு தோல் நிற்கின்ற முஸ்லிம் சமூகத்தை நாட்டின் துரோகிகளாக சித்தரிக்க முயல்கின்றமையானது எமது மக்களை பெரிதும் வேதனைக்குள்ளாக்கின்றது.
இங்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக குறிப்பிடுகின்றமையானது அவர்களது இனவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தவிரே முஸ்லிம்கள் அவ்வாறானவர்கள் அல்ல இப்போதும் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மனநிலையை முஸ்லிம் சமூகம் கொண்டுள்ளமையை பல்வேறு சந்தர்ப்பங்கள் உணர்த்தியுள்ளன.
இந்நிலையில் பயங்கரவாதத்தோடு முஸ்லிம்களை முடிச்சி போடுகின்ற நிகழ்ச்சி காரணங்களாக காத்தான்குடி பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிவாசல்களில் இடம் பெறுகின்ற சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இவற்றை இந்த உயரிய சபை முற்றாக மறுக்க வேண்டும். எனவும் தெரிவித்தார்