ஜனாதிபதி ஊடகப்பிரிவு

அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால்   நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கிடையேயும் காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஒருவருக்கொருவர் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் நோக்குவதனால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு. பயங்கரவாதத்தை உரியவாறு இனங்கண்டு அதனை பாதுகாப்புத்துறையினர் வெற்றிகரமாக அழித்துவரும் பின்னணியில் புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் நாட்டினுள் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.