மனித உரிமைகள் நீதியை பாதுகாக்கும் சமாதா நீதிவான்கள் பேரவையின் ஊடக அறிக்கை, இலங்கை பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத், ஊடகப்பணிப்பாளர் ஆசுக் றிம்சாத் ஆகியோர் அமர்ந்திருக்கும் படம்

மிலேச்சதனாமான தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு தௌஹீத் அமைப்பினையும் ஏனைய அடிப்படைவாத அமைப்பினையும் தடைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த 21ம் திகதி, கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டலில் நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை எமது அமைப்பு கண்டிக்கிறது, அத்தோடு இதற்கு காரணமான அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்து நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்டுமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்,

இந்த நாட்டில் கொடியயுத்தம் ஒன்று நடந்து முடிந்து மக்கள் சமாதான முறையில் வாழ்ந்து வந்தனர், ஆனால் அதனை குழப்பும் வகையில் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது, இலங்கையில் மூவின மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர் இதனை யாரும் மறுக்க முடியாது. தீவிர மதவாத குழுக்கள் ஆங்காங்கே உருவாகி அவர்களால் கலவரங்களும் சர்;ச்சைகளும் இடம்பெற்றதை நாம் அறிவோம். மதங்கள் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை, அதேபோலத்தான் இஸ்லாம் மார்க்கமும். ஆனால் இஸ்லாத்தில் இருக்கும் தௌஹீத் அடிப்படைவாத குழுக்கள் திட்டமிட்டு நாட்டின் சமாதானத்தை குழப்பிவந்திருக்கிறது அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.

தேளஹீத் அமைப்பினர் நாட்டிற்குள் வந்தபோது இலங்கை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்தனர், தௌஹீத் அமைப்பிற்கு எதிராக பலபோராட்டங்கள் கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது, குறித்த அமைப்பினர் பிற்பட்ட காலத்தில் கடும்போக்கு வாத கருத்தை பரப்பி அதனால் பல பிரச்சினைகள் உருவாகியது, ஏன் இவற்றை அரசு கண்டு கொள்ள வில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இலங்கையில் பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் உருவாக்குவது என்றால் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அங்கீகாரம் தேவை ஆனால் தௌஹீத் அமைப்பினர் அப்படி செய்வது இல்லை,

இன்று இந்த பிரச்சினை சர்வதேச தீவிரவாதபிரச்சினையாக உருவெடுத்துள்ளது, இதற்கான உடனடி தீர்வினை நாட்டின் பாதுகாப்பு துறை எடுக்கவேண்டும், அத்தோடு அப்பாவி முஸ்லிம்கள் மீது சட்டம் சீண்டுவதை தவிர்;;க்குமாறும் நாட்டில் கொண்டுவரப்படும் சட்டங்களினால் மனித உரிமை மற்றும் சுதந்திரம் கெடாதாவாறு செயற்படுமாறும் எமது அமைப்பு கேட்டுக்கொள்கிறது.