தமிழரசின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம் யாழ்.பல்கலைக்கழக தேவாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர் கலாநிதி டானியல் திஜாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவுப் பேருரையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்களான கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.