பாறுக் ஷிஹான்

யாழ் முஸ்லீம் மக்கள்  யாழ்ப்பாணம்  பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக கடமையேற்ற சாம்பசிவம் சுதர்சனை  வரவேற்று கலந்துரையாடினர்.

 புதிய யாழ்  பிரதேச செயலாளராக   கடந்த  2019.03.01 இல் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் வெள்ளிக்கிழமை(22) மாலை யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் வைத்து யாழ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் அமைப்புகளால்  வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து யாழ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் மீள்குடியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் சமுர்த்தி உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.இதன் போது இந்த விடயத்தை பரிசீலிப்பதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

அடுத்து மீள்குடியேற்றதுக்கான காணி பிரச்சினை வீட்டுத்திட்ட பயனாளிகளின் பிரச்சினை  மக்களுக்கான சிறுகைத் தொழிலிற்கான வாழ்வாதரம் தொடர்பிலும் அங்கு பேசப்பட்டது.

மேலும் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஆஷிக் தனது கருத்தில்    போதை பாவனையில் அதிகளவான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்கு காணப்படுகிறது என குற்றஞ்சாட்டியதுடன்  குடிநீர் பிரச்சினை  வடிகாலமைப்பு பிரச்சினை தொடர்பாகவும் பிரஸ்தாபித்தார்.

 இதற்கு புதிய பிரதேச செயலாளர்  முஸ்லிம்  மக்களுக்கு ஏற்ற வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்று கொண்டதுடன் அம்மக்களை நேரில் கண்டு  அவர்களது  பிரச்சினைகளை கேட்டு அதற்கான தீர்வுகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறனார்.