இப்பகுதிவாழ் முஸ்லிம்களிடத்தில் பழம்பெரும் கலையம்சங்களும், கலாச்சார பின்னணியும் இருந்து வருகிறது, அன்றாட வாழ்வியல் தொட்டு மத அனுஸ்டானங்கள் வரை இவர்களின் கலையம்சங்கள் பரவிக்காணப்படுகிறது, உலகின் மிகப்பழமை வாய்ந்த இசைவாத்தியங்கள் இசைத்தல், வாய்ப்பாட்டு, கவிதை இயற்றிப்பாடுதல் என்பனவை இங்கு நிறைந்து காணப்படுகிறது, பக்கீர்பைத் என்ற பாட்டிசைக்கலையின் மூலம்தான் இப்பகுதியில் இஸ்லாம் பரவியது அதுமாத்திரமின்றி அதன் பின்னணியில்தான் இஸ்லாத்தையும் வழிமுறைகளையும் முஸ்லிம்கள் விளங்கிக்கொண்டார்கள் என்பதற்கு அதிக சான்றுகள் இருக்கிறது,

பக்கீர் பைத் என்பது பக்கீர்கள் (இஸ்லாத்திற்கு தங்களை அர்ப்பணித்து தொண்டாற்றும் கோத்திரத்தினர்) அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்களையும் வாழ்வியலையும் தங்கள் பாடல்கள் மூலம் றபான் இசைத்து வீடுவீடாக சென்று தப்லீக் (பரப்புரை) செய்வார்கள், இவைகள் முன்னொரு காலத்தில் காலை மற்றும் மாலையில் தினசரி இடம்பெற்றுள்ளது. பக்கீர்களை மொஹிதீன் கூட்டம் என்றே அன்று அழைத்து வந்தனர். இந்த மொஹிதீன் கூட்டமே ஆரம்ப கூட்டம் என்பதற்கு இன்றும் இருக்கும் ஓரே சான்று இன்றிருக்கும் அனைத்து பெரிய பள்ளிவாசல்களின் பெயர்களும் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் என்றே இருக்கும். இந்த பக்கீர் கோத்திரத்தினரே அன்று பள்ளிவாசலை கட்டி பராமரித்தனர்.

மாப்பிள்ளை பைத் இது மாப்பிள்ளையை பெண்வீட்டிற்கு அழைத்து செல்லும் போது பாடும் ஓர் இசைப்பாடல், இந்த நிகழ்விலும் பக்கீர்களே அன்று அதிகம் கலந்து கொண்டிருந்தனர். மாப்பிள்ளை எவ்வாறு வாழவேண்டும், கணவன் மனைவி எவ்வாறு இருக்க வேண்டும், குடும்ப வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகிய பாடல் மூலம் றபான் இசைத்து பாடுவர். இன்று இவற்றை காணமுடிவதில்லை, இந்த விடயத்தினை கலாச்சார அம்சத்தில் விரிவாக சொல்கிறேன், மாப்பிள்ளையை சோடித்து அலங்கரித்து மக்கள் புடை சூழ கூட்டிச்செல்வர்.

வாள்  வெட்டு மற்றும் கம்பு சுத்துதல் இவைகள் தற்காப்பு கலையாக இருந்தபோதிலும் இதற்கென அண்ணாவியார்மார் இந்தக்கலையினை கற்பித்து கொடுத்து வந்தனர், தென்கிழக்கு வாழ் முஸ்லிம்களே இதில் மிகவம் பிரபலம் பெற்றிருந்தனர். வெள்ளிவாள் செந்திற கம்புகள் இவற்றிற்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது, பரப்பரை வாழ்களும் அன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளமை வரலாறுகளில் இருந்து படிக்க கூடியதாய் இருக்கிறது.
பொல்லடி மற்றும் கவிபாடுதல் பொல்லடி வரவேற்பு நடனம் என அறியப்பட்டாலும் இப்பகுதி முஸ்லிம்களின் அழைத்த விழாக்கள் மற்றும் விசேட அம்சங்களில் அரங்கேற்றப்பட்டது. இருவர் இருவராக பொல்லடிப்பதும் அண்ணாவியார் கவிபாடுவதும் மிகவும் அழகாக இருக்கும், இதனை இரசிக்கவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவர் கவிபாடுதல் கவிதை இயற்றியவர் இக்கவிதையை நாட்டுப்பாடல் வடிவில் பாடுவதே கவிபாடுதல் என்று அழைக்கப்பட்டது, இப்பகுதியில் இந்த கவிபாடுதலில் சிறந்து விளங்கி பல ஆண்களும் பெண்களும் இருந்து வந்துள்ளனர்.

வெட்டுக்குத்து பாவா நடனம் இவைகள் இன்றும் பக்கீர்களின் கொடியேற்ற கந்தூரி நிகழ்வுகளில் காணமுடிகிறது, வாள்களினால் உடம்பை வெட்டுவதும், இதன்போது நடனம் ஆடி றாத்தீப் செய்வர்,