Monday, December 3, 2018

பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்.

SHARE
எஸ்.கார்த்திகேசு

நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புக்கிறோம் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசாரை சுட்டு படுகொலை செய்தமையை வன்மையாக கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை( 03)   ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கண்டன ஆர்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கில்களில் இளைஞர்கள் பேரணியாக தம்பிலுவில் வரை சென்று தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர்


இங்கு கலந்து கொண்ட பொது மக்கள் சமாதான சூழலை சீர்குலைக்காதே,படுகொலைகள் வேண்டாம்,பொலிசாரின் படுகொலையை கண்டிக்கின்றோம் போன்ற  சுலோக அட்டைகளைகள், வெணர்கள் என்பன ஏந்த தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் வெளிக்காட்டி இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொது மக்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு பொது மக்களாகிய நாம் இடமளிக்கப் போவதில்லை. தற்போது நாடு அமைதியான முறையில் சென்று கொண்டு இருப்பதுடன் எந்த நேரத்திலும் எங்கும் யாரும் அச்சமின்றி அடையாள அட்டைகள் இன்றி பயணிக்ககூடிய வாழக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற இரு பொலிசாரின் படுகொலையானது மிகவும் கவலையளிக்ககூடிய, கண்டிக்ககூடிய  சம்பவமாகவும் நாட்டின் அமைதிக்கு சவால் விடுப்பதாக அமைந்திருக்கின்றது. இதனை பொது மக்களாகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இனி ஒரு போதும் இடம்பெறாது இருப்பதனை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
SHARE

Author: verified_user

0 comments: