Sunday, December 2, 2018

சமாதானத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி அமைதிப்பேரணி

SHARE
புதிய குரல் அம்பாறை செய்தியாளர்
நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி இன்று அக்கரைப்பற்று நகரில் அமைதிப்பேரணியொன்று இடம்பெற்றது, 

மனித உரிமைகள் நீதியை பாதுகாக்கும் சமாதன நீதவான்கள் பேரவை, அம்பாறை சிவில் சமூகம், மக்கள் சமாதான குழு பான்ற பல்வேறுபட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது,
வவுணதீவு போலீசாரின் படுகொலையினை கண்டித்தும் இங்கு பதாதைகள் வைக்கப்பட்டதோடு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பேரவையின் தலைவர் பஹத் ஏ.மஜீத், சிட்டிசன் கொமிட்டி தலைவர் அன்வர், முன்னாள் மாகாண அமைச்சர் நவரத்தினராஜா உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 comments: