Wednesday, December 5, 2018

அதிக நெருக்கடி தந்தால் ஜனாதிபதி பதவியை துறந்து விவசாயம் செய்வேன்

SHARE
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, 'தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது பொலொன்னறுவை விவசாய பன்னைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சிவசப்பட்டு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  
இது பற்றிய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள மனோ கணேசன் இந்த கருத்தை ஜனாதிபதி கூறியபோது, அந்த கலந்துரையாடலில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதுயுதீன், ரவுப் ஹக்கீம், பழனி திகாம்பரம், கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், மலிக் சமரவிகிரம, கயந்த கருணாதிலக, அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இருந்தார்கள், என்று கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்தது. 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கப் போவதில்லை என ஜனாதிபதி இங்கு கூறியிருந்தார்.  
SHARE

Author: verified_user

0 comments: