Wednesday, December 5, 2018

முஸ்லிம்களுக்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை - நசீர் எம்.பி

SHARE
புதிய குரல் பாராளுமன்ற செய்தியாளர் குருபரன்
நல்லாட்சி அரசு மூன்றரை வருடங்களை கடந்துவிட்டது ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.


அந்த உரையில்,

முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை,  பள்ளிவாசல் பிரச்சினை, கல்வி மற்றும் இதர பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருக்கிறது, முஸ்லிம் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை இழந்திருக்கிறார்கள்.

அம்பாறை உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினை இன்னும் முடிவுறாமலேதான் இருக்கிறது, பொத்துவில் தனிக்கல்வி வலயம் இன்னும் பெற்றுத்தரப்படவில்லை.

என உரையாற்றினார், குறித்த உரை நல்லாட்சி அரசின் அசமந்த போக்கை காட்டுவதாக அமைந்திருந்தது.
SHARE

Author: verified_user

0 comments: