Tuesday, November 6, 2018

திரையில் ’சர்கார்’ அமைக்கலாம்.. நிஜத்தில் முடியாது’ - தமிழிசை

SHARE
புதிய குல் சென்னை செய்தியாளர்திரையில் ஆள்வது போல நிஜத்தில் ஆள நினைப்பது மாயை என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.சென்னையில் பாஜக சார்பில் ‘மக்களோடு தீபாவளி’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”திரையில் ஆள்வது போல நிஜத்தில் ஆள நினைப்பது மாயை. களத்தில் பணியாற்றுவது என்பது மிகவும் சவாலான காரியம்” என்று கூறினார்.
மேலும், “மூன்று மணி நேரத்தில் சினிமாவில் ‘சர்கார்’ அமைக்கலாம். முதலைமச்சர் ஆகலாம், பிரதமர் ஆகலாம், ஆனால் நிஜத்தில் அவ்வளவு எளிதில் ஆகி விட முடியாது. இது நடப்பவர்களுக்கும் தெரியும், நடிப்பவர்களுக்கும் தெரியும். 
இவ்வாறு தமிழிசை கூறினார்.
SHARE

Author: verified_user

0 comments: