Monday, November 19, 2018

குண்டு துளைக்காத சொகுசு வாகனம் தருவிப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த அலுவலகம் விளக்கம்

SHARE
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸவின் பாவனைக்கென பிரித்தானியாவில் இருந்து குண்டு துளைக்காத வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து  நீக்கிய கையோடு இவை பிரித்தானியாவில் இருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்தினூடாக கொண்டுவரப்பட்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி  வெளியிட்டிருந்தன.

ஹம்பாந்தோட்டை மாவட்ட முக்கிய புள்ளி ஒருவரின் தேர்தல் பிரசாரங்களுக்காக இவை தருவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரு ரேன்ஜ் ரோவர் வாகனங்களும் விசேடமாக தயாரிக்கப்பட்டிருந்ததோடு நவீன தொழில் நுட்பங்களுடன் கூடியதாக உருவாக்கப்பட்டிருந்ததாக அறிய வருகிறது.
SHARE

Author: verified_user

0 comments: