Tuesday, November 6, 2018

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ரணில் அரியணை ஏறுவார்

SHARE
ஸ்ரீ ராமநாதன் - அரசியல் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தனது பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபித்து மீளவும் அரியணை ஏறுவார் என அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

தமிழட்தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் யாருக்கு ஆதரவாக இருக்கின்றனவோ அவர்களே ஆட்சியாளர்கள் என்பது உலகிறிந்த உண்மை, இதுவரை இந்த கட்சிகள் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவில்லை, அப்படி வழங்கப்போவதுமில்லை என குறிப்பிட்டுள்ளன.

ஜனநாயகம் வாழவேண்டும் என்பதற்காய குறித்த கட்சிகள் பாடுபட்டு வருவதாக கட்சிகளின் ஊடகப்பேச்சாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாராளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் அதாவது, ரணில் இருக்கும் பக்கத்தில் குறித்த கட்சிகள் அமர தீர்மானித்துள்ளன.
SHARE

Author: verified_user

0 comments: