Tuesday, November 20, 2018

இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியுள்ளது - பிரதமர்

SHARE
உலகின் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியுள்ளதாகவும், அந்த நாடுகளின் சகல மக்களுக்கும், இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும் மீலாதுன் நபி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அந்நாடுகள் வழங்கிய சர்வதேச ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி பிறந்ததினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நபியவர்களின் முன்மாதிரியை இந்நாளில் நினைவுகூர்ந்து அதனடிப்படையில் செயற்படுவது அவசியம் என்றும் பிரதமர் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: