Friday, November 23, 2018

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்

SHARE
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி உடல்நிலை குறித்த இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றார்
SHARE

Author: verified_user

0 comments: