Tuesday, November 6, 2018

மஹிந்த பிரதமரானது திருவிழாவில் தாலியை திருடன் கொள்ளையடித்து போன்றது

SHARE
புதிய குரல் கொழும்பு செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமாரானது திருவிழாவில் தாலியை திருடன் கொள்ளையடித்து போன்றது என முன்னாள் அமைச்சரும் பாராளுன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7ல் இடம்பெற்ற விருது விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அமைச்சர்,

திருவிழாவில் எல்லோரும் அரோகரா சொல்லும் போது திருடனும் வந்து அரோகரா  சொல்லி தாலியை களவு செய்வதை போலவை மஹிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார், மக்கள் அவரை நிராகரித்து நல்லாட்சியை கொண்டுவந்தனர் அதற்கு பெரிதும் பாடுபட்ட ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட்டார். இது மக்களால் வழங்கப்பட்ட அங்கீகாரம். இதுவே ஜனநாயகம் ஆனால் மைத்திரிபால அவரை நீக்கியது ஜனநாயகம் அல்ல, எங்களுக்கு மஹிந்த - ரணில் - சஜித் என்று பிரச்சினையல்ல ஜனநாயகம் வாழவேண்டும்.

மக்களின் ஆணை மூலம் ஆட்சியமைய வேண்டும், அப்படி நடக்க நாங்கள் பெரிதும் பாடுபடுசோம். மனோவிற்கு பிரதமர் வழங்கினால் பின்கதவால் மனோ செல்லமாட்டார், கோடிகளுக்கு அடிமையாகும் அரசியல்வாதியல்ல நான் எனக்கும் எனது கட்சிக்கும் ஓர் கொள்கையிருக்கிறது அது மக்களின் கொள்கை என உரையாற்றினார் மனோ.

நிகழ்வில் வடகிழக்கில் சமாதானத்திற்காக பாடுபட்டவர்களுக்கு விருதுகளை மனோ கணேசன் வழங்கி வைத்தார்.


SHARE

Author: verified_user

0 comments: