Sunday, September 30, 2018

மஹிந்த பிரதமர் - ஜனாதிபதி சஜித் - பாதுகாப்பு அமைச்சர் கோட்டா

SHARE


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளார் 

கொழும்பு அரசியல் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வந்த ரகசிய செய்தியை  எமது ஊடகம் வெளியிடுகிறது.

கடந்த தேர்தல் போலவே கூட்டு ஆட்சியே இடம்பெறும், மஹிந்தவின் பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாச சார்பான ஐக்கிய தேசியக்கட்சி அணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பெரும்பான்மை இன சிங்கள கட்சிகள் பலவும் கூட்டாக இணைந்து போட்டியிடவுள்ளது.

எதிர்வரும் ஆட்சியில் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளது, அந்த அடிப்படையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும் பொதுவேட்பாளர் சஜித் ஜனாதிபதியாகவும், சபாநாயகராக ஒரு சிறுபான்மை கட்சி முக்கியஸ்தரும் பாதுகாப்பு அமைச்சு தனியாக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக கோட்டாபய அவர்களும், பொருளாதார அமைச்சு தனியாக்கப்பட்டு அதற் பொறுப்பாக பசில் ராஜபக்ச அவர்கள், இளைஞர் விவகார மற்றும் டிஜிடல் பிரிவிற்கு நாமல் ராஜபக்ச அவர்களும், எதிர்க்கட்சி தலைவராக மீண்டும் ரணில் அவர்களும் வருதற்கான அதிக சாத்தியக்கூறுகள் தென்படுகிறது. இந்த தகவலை உளவுப்பிரிவுகள் ஊர்ஜிதம் செய்துள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: