Friday, August 17, 2018

பகிடிவதை முறைப்பாடுகளைப் பதிவு செய்ய விசேட அலுவலகம்

SHARE

ஐ. ஏ. காதிர் கான்

பகிடிவதைச்  சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு, விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர் வன்முறைச்  செயற்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகளைத்  தெரிவிப்பதற்காக, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை எட்டு மணி முதல்  மாலை நான்கு மணி வரையில் இந்த அலுவலகம் திறந்திருக்கும்.
பகிடிவதைச்  சம்பவங்கள் தொடர்பாக 24 மணித்தியாலங்களும் இயங்கும் 011 21 23 700 என்ற  தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என்றும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE

Author: verified_user

0 comments: