Friday, August 17, 2018

சென்னையில் செப்.5ல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,?

SHARE


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது.

கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், 'தி.மு.க., தலைவராக, ஸ்டாலின்

பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்' என, சூளுரைத்தனர்.

ஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உதவியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.'தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்' என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இந்த பேரணி, சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை யிலிருந்து புறப்பட்டு, கருணாநிதி சமாதி சென்ற டையும்.இதில், அழகிரியின் பலத்தை காட்டு வதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து, 50 ஆயிரம் பேரை திரட்டுகின்றனர்.
SHARE

Author: verified_user

0 comments: