Thursday, July 5, 2018

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

SHARE

Image result for விஜயகலா
பொறுப்பான அமைச்சுப்பதவியிலிருந்துகொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் வைத்து நான் பேசிய கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.

இந்த விடயம் தொடர்பில் எனது கட்சியின் தலைவர் செவ்வாய்க்கிழமை என்னிடம் தொலைபேசியில் கேட்டார்.

அந்த சூழ்நிலையில் எனது நிலைமையைப் பற்றி கட்சியின் தலைவர் புரிந்துகொண்டிருந்தார். நான் ஏன் அப்படி கூறினேன் என்பதையும் அவர் விளங்கிக்கொண்டார்.

ஆனால் இந்த சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் முடியும் வரை எனது இராஜாங்க அமைச்சு பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக எனது கட்சியின் தலைவரிடம் நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால் கட்சி வட்டாரங்களும், எனது கட்சியின் தலைவரும் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் நேற்று நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தேன். பிரதமரும் எனது கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடினேன்.

இதன்போது மீண்டும் எனது அமைச்சு பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்தேன். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு அமைச்சர் என்ற ரீதியின் எனக்கு தெரியும் என்றும் விஜயகலா மகேஸ்வரன் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.
SHARE

Author: verified_user

0 comments: