Friday, July 6, 2018

ஜனாதிபதிக்கு முடியாவிடின் வீடு செல்லட்டும்!

SHARE


அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமையை சீர்செய்ய ஜனாதிபதி தலையிடாவிடின் பதவியை இராஜினாமா செய்து விட்டுக்கு செல்லட்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பெண் புலிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் நினைப்பது போல் தூக்கம் எனின், நாம் விழிக்கும் நேரமும் உள்ளது. அப்போது எமது பேச்சை நிறுத்த முடியாது போகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
SHARE

Author: verified_user

0 comments: