Monday, July 2, 2018

யாழில் மூன்று கொடூர சம்பவங்கள்! முக்கிய பொறுப்பில் சம்பந்தன்

SHARE


யாழில் ஒரு வாரத்தில் மூன்று கொடூர சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இவற்றிட்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்று கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கல்வி, கலாச்சார, பண்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் பெயர்போயிருந்தது. இன்று தலைகீழாக நிலைமை மாறிப்போய்விட்டது.

வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம் ஒருபுறம், போதைப்பொருள் பாவனையின் உச்சம் மறுபுறம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு யாழ்ப்பாணத்தின் நிலைமை மோசமாக வந்துள்ளது. இது திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.

ஒரு வாரத்திற்குள் மூன்று கொடூரச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடசாலைச் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இன்னொரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார். மேலுமொருவர் கொள்ளையர்களால் மிருகத்தனமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரமான கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: