Thursday, July 5, 2018

பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் வெளிநாடு செல்லத் தடை

SHARE


பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் எட்டு பணிப்பாளர்கள் வெளிநாடு செல்ல தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிறுவனத்தின் பணிப்பாளர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று வெளிநாடு செல்ல வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், அர்ஜூன் அலோசியஸ், ஜோன் அன்டன், விதாரஞ்சித் ஹூலுகல்ல, புஷ்பமித்ர குணவர்தன, முத்துராஜா சுரேந்திரன், அஜாகர்தி புஞ்சிஹேவா, ஹெட்டியாகொட சஞ்ஜீவ பெர்னாந்து ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தெரியப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: