Wednesday, July 4, 2018

யாழ். மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து!

SHARE
Related image

யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக யாழ். குடாநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டு சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: