Monday, July 2, 2018

வடக்கு முதல்வரை, பதவி விலக கோருவது ஒரு கேலிக்கூத்தாகும்!

SHARE


முதலமைச்சரை பதவி விலக கோருவது ஒரு கேலிக்கூத்தாகும் என வட மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜாவின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

டெனீஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக மாகாணசபையினுடைய அதிகாரங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு முதலமைச்சர் தான் அமைத்த அமைச்சரவையையே மாற்ற முடியாது என்றால் அந்த மாகாணசபைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த வட மகாணசபையை உருவாக்கிய பின்னர் நாங்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இந்த தீர்ப்பானது வட மாகாணசபையின் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வந்த அமைச்சர் அதனூடாகவே வந்த அமைச்சரை நீக்கியதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிராக நின்று வழக்கு தொடுத்து அந்த வழக்கை நடத்தியமை மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.

வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சரை கௌரவமாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த எதிர்கட்சி தலைவர் தான் எப்போதோ தனது பதவியில் இருந்து கௌரவமாக விலகியிருக்க வேண்டியவர்.

அவர் அப்படி விலகியிருப்பராய் இருந்தால் இப்போது முதலமைச்சரை விலக சொல்வது நியாயமானதாக இருந்திருக்கும். பல சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், விலத்த வேண்டும் என்றும் அவரது கட்சியே பல கோரிக்கைகளை எழுத்து மூலமாக விடுத்தது.

இருப்பினும் அவர் அந்த பதவியிலேயே இருப்பேன் என கங்கனம் கட்டிக்கொண்டு இருந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக பார்க்கப்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து விலக கூறுவது ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: