Sunday, June 3, 2018

போராட்டங்களை நிறுத்தக்கூடாது: கமல்

SHARE


தூத்துக்குடி போராட்டத்தை நல்ல பாதையாக பார்த்தேன்; போராட்டங்களை நிறுத்தக்கூடாது' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் தெரிவித்ததாவது: திமுக உறுப்பினர்கள் மீண்டும் சட்டசபை செல்வதாக எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது. நானாக எந்த கருத்தையும் கூறுவதில்லை; நான் கூறும் கருத்துக்கள் அனைத்தும் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பவை. 

தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி பேசிய கருத்து அவரது சொந்த கருத்து. தூத்துக்குடி போராட்டத்தை நல்ல பாதையாக பார்த்தேன். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள், நிறுத்தவும் கூடாது. சினிமாத்துறை சம்மந்தமாக பேச நான் பெங்களூரு செல்லவில்லை. காவிரி விவகாரம் குறித்து பேசுவேன்.' இவ்வாறு அவர் பேசினார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நாளை (ஜூன் 4) சந்திக்க உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து இன்று இரவு விமானம் மூலம் பெங்களூரு கிளம்பி சென்றார். அவருடனான சந்திப்பின் போது காவிரி விவகாரம் குறித்து பேச்சு நடத்துவார் என தெரிகிறது
SHARE

Author: verified_user

0 comments: