Friday, June 8, 2018

ரஜினியின் கதாபாத்திரம் குறித்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்

SHARE


'காலா' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கும் அவரது நிஜ வாழ்வின் கொள்கைகளுக்கும் உள்ள முரண்பாடுகள் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 'காலா' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ”நிஜ வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் சமூகத்திற்கான கருத்துகளை வலியுறுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதனால் தான் அவரை மக்கள் அங்கீகாரம் செய்து தலைவராக ஏற்றுக்கொண்டு அரியணையிலும் அமர வைத்தனர். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மாறாக நான் அதுகுறித்து முடிவெடுக்க முடியாது.

'காலா' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கும் அவரது நிஜ வாழ்வின் கொள்கைகளுக்கும் உள்ள முரண்பாடுகள் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 comments: