Thursday, May 24, 2018

யாழிலும் உக்கிரமடையும் மாட்டிறைச்சிக்கு எதிரான பேராட்டம்

SHARE

தமிழ் பேசும் மக்களாகிய ஹிந்து முஸ்லிம் உறவு இலங்கையில் மிக நீண்ட வரலாறு கொண்டது, ஆனால் யுத்தத்திற்கு பின்னர் வெளியுலக சக்திகள் அதனை பிரிக்க பலவழிகளில் சதி செய்த கொண்டிருப்பதை காணலாம்.

என்றுமில்லாதவாறு சிவசேனை அமைப்பு போராட்டங்களை நடாத்த ஊக்கமளிக்கிறது, முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன, சிங்கள ராவய போர்க்கொடி துாக்கியது இப்போது சிவசேனையும் துாக்கியுள்ளது.

மாடறுப்பு என்பது அல்லது மாட்டிறைச்சி வர்த்தகம் என்பது இலங்கையில் மிக நீண்ட வரலாற்று பின்னணியை கொண்டது, முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட (அறுத்துப்பலியிடல்) உழ்ஹியா கடமையை செய்யவும் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வர்த்தகம் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது, ஏன் சிவசேனை இந்த கால கட்டத்தில் இதனை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை இலங்கை அரசு, வடமாகாண அரசு, முஸ்லிம்-ஹிந்து தலைவர்கள் முன்னின்று தடுத்து நிறுத்த வேண்டும் என்பது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த முடிவாகும்.


SHARE

Author: verified_user