Sunday, May 13, 2018

கச்சான் விற்று வயிற்று பசி போக்கும் பேராளிகளுக்கு உதவுங்கள் பிறகு ஈழம்பேசுங்கள்

SHARE


வடக்கிலும் கிழக்கிலும் முன்னாள் விடுதலைப்புலிகள் பலர் மிகுந்த கஸ்டப்பட்டு தொழில் செய்கின்றனர். ஒரு சிலரை வீதியோரங்களில் கச்சான் விற்றுக்கொண்டிருக்கின்றனர் இன்னும் சிலர் வீதிகளில் பிச்சை எடுக்கின்றனர். யார் இவர்கள் எதற்காக இந்த வேதனை வாழ்வு? எல்லாம் தமிழ் மக்களுக்காக அவர்கள் செய்த தியாகத்திற்கு அவர்கள் அனுபவிக்கும் பலன்.

அன்புள்ள புலம்பெயர் உறவுகளே, உள்ளுரில் ஈழம் பேசும் கனவான்களே, தமிழகத்தில் ஈழம் பேசி வயிறுவளர்க்கும் தனவந்தர்களே, நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு கதியற்று இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவுங்கள்.

பின்னர் நினைவு தினம், மாவீரர் தினம், மற்றயை தினங்கள் கொண்டாடலாம், புலிகள் என்ற ஓரே காரணத்திற்காக அவர்களும் படும் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைவோம் வாரீர்.

புதிய  குரல் ஆசிரியர்
SHARE

Author: verified_user