Friday, April 27, 2018

மதங்கள் ஒற்றுமைக்கான பாலமே அன்றி; முரண்பாட்டிற்கான அடித்தளமல்ல - தவம்

SHARE

ஆடை இனவாதத்தோடு நோக்கப்பட வேண்டிய விடயமல்ல. கலாசார பின்னணியோடு நோக்கப்பட வேண்டிய விடயம். இதனை இந்து சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் குறிப்பிட்டுள்ளார்,
புதிய குரலுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்ககையில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆடை முரண்பாட்டோடு கையாளப்பட வேண்டிய விடயமல்ல. நமது மார்க்க/கலாசாரத்தைப் பாதுகாக்கும் பின்னணியோடு நோக்கப்பட வேண்டிய விடயம். இதனை முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கை பல்லின சமூக பண்புள்ள நாடு. இதனைப் புரிந்து கொள்ளாமையே 30 வருட கொடிய அழிவிற்கு வழிசமைத்தது.
இந்த அழிவிலிருந்து எல்லோரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரினதும் இன/மத/கலாசார அடையாளங்களை மற்றவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
அபாயா இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடையாளமல்ல.
இஸ்லாம் மதத்தின் அறிவுறுத்தல்களில் ஒன்று.
அதற்காக மூடப்பட வேண்டியவற்றை மூட அபாயா மட்டுமே ஆடை அணிகலனல்ல.
மாற்றுமதத்தினரோடு முரண்படாமல் மார்க்கத்தின் வரையறைக்குள் வழி தேட வேண்டும்.
மதங்கள் ஒற்றுமைக்கான பாலமே அன்றி; முரண்பாட்டிற்கான அடித்தளமல்ல என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
SHARE

Author: verified_user