Monday, April 9, 2018

வட மாகாண முதலமைச்சரை இப்போதே தீர்மானிக்க முடியாது; சி.விக்கு இடமில்லை

SHARE

வட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது, முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர் குறித்து இப்போதே தீர்மானிக்க முடியாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தற்போதையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.  இதுசம்மந்தமாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இரா.சம்பந்தன் இவ்வாறு பதில் வழங்கினார். இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் சிங்கள மொழியில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஒருமாத காலம் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்.   அரசியல் தீர்வு காணும் விடயம் ஏற்கனவே தாமதமாகியுள்ளது.நாட்டின் அனைத்து மக்களுக்கும் இது தேவையாக உள்ளது.இனியும் இந்த விடயம் தீர்க்கபடாவிட்டால் நாடு வீணாகிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user