Friday, April 6, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கடி, எங்கிருந்து வந்தது, எங்கே போகிறது?

SHARE

விஸ்வாமித்ரா

“வரலாறு ஒருபோதும் பிரியாவிடை சொல்வதில்லை. உங்களை பிறகு பார்க்கிறேன் என்றுதான் வரலாறு கூறுகிறது”. - எட்வேடோ கலியானோ
1943ல் இலங்கை அரச சபை அரங்குக்குள் ஜேஆர் ஜெயவர்தனா 

நுழைந்த சமயத்தில் ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவவாதி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டது. அப்போது இடதுசாரி தலைவர்களாகக் கருதப்பட்ட பிலிப் குணவர்தன, கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி. கொல்வின் ஆர். டீ. சில்வா மற்றும் பீற்றர் கெனமென் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட அவதூறான அரசியல் ரீதியான தாக்குதல்களை அவர் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. ஜேஆரின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம், மேற்கத்தைய அடிப்படையானதும் மற்றும் அடிப்படையில் மார்க்சிய - லெனிசிய அரசியல் பொருளாதாரத்துக்கு விரோதமானதாகவும் உள்ள ஒரு தத்துவ விசுவாசத்தை பிரகடபனப்படுத்தும்படி இருந்ததால் அது அவரை பாட்டாளி வர்க்கத்தின் எதிரியாக ஆக்கியது. ஆனால்; அப்போது பிரபலப்படுத்தாதது என்னவென்றால், அந்த நேரத்தில் ஜேஆர் ஒரு 100 சதவிகிதம் உள்ளுர் கல்வித் தயாரிப்பு மற்றும் வளர்ப்பினால் ஆக்கப்பட்ட உற்பத்தி என்பதை,( ஜேஆர் தனது கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரி என்பனவற்றில் பயின்றவர்) , அதேவேளை அவரது அரசியல் போட்டியாளர்களான, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா, கலாநிதி.என்.எம்.பெரேரா, கலாநிதி. கொல்வின், கெனமன் மற்றும் பிலிப் குணவர்தனா ஆகியோர் வெளிநாடுகளில் கல்வி பயின்று ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் கலாச்சாரத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.

ஜேஆர். இதைக்கண்டு தயங்கவில்லை. இந்தக் கிண்டலான மற்றும் கடுமையான இகழ்ச்சிகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தபோதிலும், பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான காரணங்களுடன் அமைதியாக அவர்களுடன் மோதினார், தற்கால அரசியல்வாதிகளிடம் இது முற்றிலும் இல்லாத ஒன்றாக உள்ளது. அவரது புத்திசாலித்தனமான அறிவு மற்றும் வெட்டும் திறமைக்கு ஈடாக அதன் பின்னர் அரச சபையிலோ அல்லது பாராளுமன்றிலோ வேறு ஒருவர் வரவில்லை. இருந்தும் அவருக்குச் சொந்தமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் அவரது நிலைப்பாடு முற்றிலும் மற்றொரு விடயமாக இருந்தது. கட்சியின் ஸ்தாபகத் தலைவரான, டி.எஸ்.சேனநாயக்கா 1952ல் இறந்த பிறகு டிஎஸ் இனது தெரிவான டட்லி சேனநாயக்காவிற்கு வெளிப்படையான விருப்பமின்மை மற்றும் சுயநம்பிக்கையின்மை என்பன இருந்தபடியால், சுதந்திர இலங்கையின் முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ஜேஆர் ஜெயவர்தனாவை, அவரது மிக இளம் வயதில் மற்றும் அரசியலுக்கு புதுவரவாக இருந்த அவரை, அனுபவம் வாய்ந்த மற்றும் உயர் பழக்கவழக்கமும் வெளிநாட்டுக் கல்வியறிவும் கொண்ட அமைச்சரவை அமைச்சர்கள் இருந்த சூழலிலும் ஐதேகவின் தலைமைப் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டது. அரசியலை நோக்கிய ஜேஆரின் தணிவானதும் மற்றும் கணிக்கப்பட்ட அணுகுமுறையானது நாட்டில் உள்ள வாக்களிக்கும் மக்கள்மீது அவரது போட்டியாளர்கள் காண்பித்த உணர்ச்சிகரமானதும் மற்றும் அகம்பாவமான வேண்டுகோள்களின் சூழலில் அபூர்வமான ஒன்றாக இருந்தது, இது டி.எஸ்.சேனநாயக்காவிற்கு தகுதியும் நம்பகமும் கொண்ட வாரிசு இவர்தான் என்று சொல்ல வைத்தது.
பேராசிரியர் கே.எம்.டீ சில்வா எழுதிய ‘ஸ்ரீலங்காவின் ஜேஆர் ஜெயவர்தனாவின் வாழ்க்கைவரலாறு’  என்கிற நூலின் முதலாம் பாகத்தில் 250 முதல் 261 வரையான பக்கங்களில், நாட்டின் மிகப் பழைமயான அரசியல் கட்சியான ஐதேக வின் தலைவர் மற்றும் பிரதம மந்திரியாக டட்லி சேனநாயக்கா பதவி வகித்ததின் பின்னணியைக் குறிப்பிடுகையில், சிக்கலான திட்டமிடல், கவனமான வழிநடத்துதல் என்பனவற்றைக்கொண்டு சதி நிறைந்த சரித்திரம் இறுதியில் வெற்றியடைந்தது என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஐதேகவின் முதல் இரண்டு தலைவர்கள் மற்றும் இலங்கையின் முதல் இரண்டு பிரதமர்களும் தந்தை மற்றும் மகன் ஆவர். ஆனாலும் அவர்களின் அழிவில்லாத புகழுக்குக் காரணம் அவர்களில் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பண்டாரநாயக்காக்கள்; மற்றும் ராஜபக்ஸ வழியில் குடும்ப ஆட்சியை நடைமுறைப் படுத்தவில்லை, பொதுமனிதனின் கட்சியாக இருந்த ஸ்ரீலசுக இவர்களினால் ஒரு களியாட்ட அளவுக்கு தூண்டப்பட்டது. ஐதேக குடும்ப ஆட்சியை நடைமுறைப் படுத்தாமல் ஒதுங்கியிருந்தது மட்டுமன்றி நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு முதன் முதலாக கொவிகம வேட்பாளர் அல்லாத ஒருவரைத் தெரிவுசெய்தது. மற்றும் ஜேஆர் ஜெயவர்தனா அவர்கள்தான் ஆர்.பிரேமதாஸ தனது கட்சியின் தலைவராகத் தெரிவாவதற்கு வழியமைத்தவர்.
தனது காலத்துக்கு முந்திய ஒரு மனிதனாக, ஜேஆர் எப்போதும் தனது முன்னோர்களின் வழியை முன்னெடுத்துச் சென்றதோடு, ஐதேகவின் அதிகாரத்தை பிரேமதாஸவுக்கு கையளிப்பது அரசியல் ரீதியாக விவேகமானது என்பதை மட்டுமல்லாது, செய்வதற்கு அதுதான் சரியானது என்பதையும் அறிந்திருந்தார். கட்சியின் அதிகாரத்தை பிரேமதாஸ என்னசெய்தார் என்பது முற்றிலும் வேறு விஷயம். ஆனால் தேசிய அரசியல் கட்சிகளின் மரபு வழியில் இருந்து விலகி தனியாகப் பயணித்தது அதன் துணிச்சலான புதிய நகர்வுக்கான தெளிவான சமிக்ஞை ஆகும். மிகச் சில தலைவர்களுக்கே அத்தகைய பார்வை உள்ளதுடன் மற்றும் அந்தப் பார்வைக்கான இலக்கினை அடையும் தைரியமும் உள்ளது. அத்தகைய அவரது கட்சி இன்று நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன் மற்றும் அந்த நெருக்கடி அந்தக்கட்சியின் தலைமையைச் சுற்றியே சுழல்கிறது. ஓரவஞ்சனையாக அதன் மத்தியில் சிக்கியுள்ள மனிதர் அவரது சொந்த மருமகனான ரணில் விக்கிரமசிங்கா ஆவார். ரணிலின் தாய், ஊடகச் சக்கரவர்த்தியான டி.ஆர் விஜயவர்தனாவின் மகள், டி.ஆர் விஜயவர்தனா ஜேஆரின் தாய்வழி மாமன். ரணிலின் வம்சாவழி, பாரம்பரிய உணர்வில் மிகவும் சுவராசியமானதாகும். ஆனால் இது 2017 ஆகும். இந்த மரபுவழிகள் எல்லாம் கடந்துபோன ஒரு யுகத்தின் மூட நம்பிக்கைகளுடன் தொடர்பானது. சமூகக் குழுக்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கான வழியை சமூக ஊடகங்கள் புரட்சிகரமாக்கியுள்ளன. செய்திகள் அதிவிரைவாக அதன் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதில் சுறுசுறுப்பான வேகம் காண்பிக்கப்படுகிறது அதேவேளை அது ஒளிபரப்பும் சில விடயங்கள் முற்றிலும் தவறானவைகளாகவும் மற்றும் முற்றிலும் சரியற்றதாகவும் உள்ளன. சமூக ஊடகங்கள் வழமையாக சதி முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு ஏற்ற ஒரு விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. இவ்வாறு வேகமாக மாற்றமடையும் பின்னணியில் ஒரு அரசியல் தலைவர் கடுமையான எச்சரிக்கையைப் பின்பற்றுவதுடன் தான் செய்யவேண்டியதையும் மற்றும் தன்னால் செய்யக்கூடியதையும் மிக விரைவாகச் செய்துமுடிக்க வேண்டும்.
இத்தகைய பரபரப்பான காட்சியில் இன்றைய ஐதேக தலைமை ஒரு கடும் சவாலை எதிர்கொள்கிறது. இந்த நாட்டின் இளைஞர்கள் சமூக ஊடகங்களுடன் பசைபோட்டு ஒட்டப்பட்டுள்ளார்கள் அந்த தொழில்நுட்ப பரிணாமமே அவர்களுக்கு வேத வாக்காக உள்ளது. ஸ்மார்ட் போன்களுடன் இணைந்துள்ள இந்த தலைமுறை  இதில் சொல்லப்படும் செய்திகள் மற்றும் செய்திக்கதைகளை எச்சரிக்கையுடன் பின்தொடர்ந்து அவற்றை தங்கள் படிப்பில் பிரயோகிப்பதற்கு வழக்கமாக எதிர்பார்த்துள்ளார்கள். ஐதேகவின் தலைமை விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ இது அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய கடுமையான யதார்த்தமாக உள்ளது. இந்தக் களத்தில் இருந்து வெற்றிகரமாக வெளிவரவேண்டுமானால், எந்தவித முட்டாள்தனமான நோக்கமும் இல்லாமல், கட்சியில் முடிவுகளை எடுப்பவர்கள் சமூக ஊடகங்களின் பிரயோகம் மற்றும் செயற்படுத்தல்களில் போதிய அறிவு உள்ளவர்களாகவோ அல்லது அதைச் செய்யக்கூடிய அலுவலர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டிய வகையில் கட்சியை கட்டமைப்பச் செய்யவேண்டும்.
இன்றைய வாக்காளர் அதிநவீனமானவர் அவர் அரசியல்வாதியைக் காட்டிலும் அவரை நன்கு எடைபோட்டு வைத்துள்ளார். அவரது விழிப்புணர்வு மற்றும் பிரச்சினைகளுக்க விரைவாகத் தீர்மானம் எடுப்பது மற்றும் அவர்கள் இறுதியில் வாக்களிப்பதற்கு தீர்மானிக்கும் வழி என்பன ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் சுய நம்பிக்கையுடன் தற்போதைய பிரச்சினைக்கு மிகத் தீவிரமான அணுகுமுறையை பின்பற்றுவது, 1991 முதல் 1994வரை லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்கா ஆகியோர் ஐதேகவில் தங்களது இருண்ட நாட்களில் ஊடகவியலாளர்களை கையாண்ட விதத்துக்குச் சமமானது, தொழில்சார் நிபுணர்களுடன் பணியாற்றும் ஒரு ஊடக நிருவாகத்தின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி ஐதேக அமலாக்கவேண்டிய சீர்திருத்தம் பற்றித் தெரிவிப்பதாகும். உண்மையில் கட்சியின் முழுக் கட்மைப்புக்கும் அவசியமானது நிபுணத்துவம் வாய்ந்த அலுவலர்களை முழுநேர ஊழியர்களாக நியமிப்பதுதான் விசேடமாக செயலாளர் மற்றும் தலைவர் பதவிகளில். இதற்காக ரணில் மற்றும் அவரது நண்பர்கள் வேறு எங்கும் போக வேண்டாம். நவீன ஐதேகவின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதியான ஜேஆர்.ஜெயவர்தனா ஐதேக வுக்குள் உருவாக்கிய மிகக்கடுமையான மற்றும் முற்போக்கான மாற்றங்கள் என்பனவற்றை அவதானித்து அவற்றை உதாரணங்களாக மேற்கொண்டாலே போதுமானது.
ஜோர்ஜ் சந்தாயன கூறியதின் பொழிப்புரை: ‘ஒருவர் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால், ஒருவர் அதை மறுபடியும் கண்டிப்பார்’ என்பதாகும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான நிலையில் இது ஒரு குறைபாடான மதிப்பீடு. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கா மற்றும் அவர் நண்பர்கள் உண்மையில் ஒரு மலை உச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் பின்திரும்புவதற்கான அவசியம் எதுவுமில்லை. இதற்கு மாறாக இது விவேகமற்றதாக இருக்கிறது ஆனால் மறுபக்கத்தை நோக்கி கடப்பதற்காக அது சந்தித்த படுகுழிகள் மற்றும் சவால்களைப் பார்க்கும்போது அது மலை உச்சியை நோக்கிச் செல்லவேண்டியது இன்றிமையாததாகத் தோன்றுகிறது. அதைத்தான் 1973ல் அவரது முன்னோடி மறைந்ததின் பின்னர் ஜேஆர் துல்லியமாகச் செய்தார். அந்த வகையான துணிச்சாலன அடியை எடுத்து வைப்பதற்கு ஒருவருக்குத் துணிவும் சுயநம்பிக்கையும் அவசியம். மக்கள் வலிமையான மனிதர்களைத்தான் தேடுகிறார்கள். அவர்களுக்கு பலவீனமார்களில் இருந்து பலசாலிகளை எப்படி வேறுபடுத்துவது என்பது நன்றாகத் தெரியும்.
ஆண்கள் மற்றும் பெண்களின் குணாதிசயங்களுக்கு நெருக்கடிகள் சவால் விடுக்கின்றன. தங்கள் தலைகளை வலுவாகவும் மற்றும் உறுதியாகவும் வைத்திருப்பவர்கள் நிச்சயம் வெற்றியடைவார்கள், மற்றும் அதை விரும்பாதவர்கள் கோடைகாலத்தில் சூடான வெப்பத்தில் கருகிப்போன ஒரு இலையைப்போல பறந்துவிடுவார்கள். ஒரு குறுகிய உணர்வில் மிகவும் குறுகிய காலத்தில் பெறுகிற ஒரு வெற்றி உண்மையில் வெற்றி ஆகாது. ஹிட்லர் மற்றும் அவரது பலமான இராணுவத்தின் கொடூரமான தாக்குதலால் வின்சன்ட் சர்ச்சில் பலவீனமடைந்து விடவில்லை.
ஐதேகவுக்கு எதிரான முரண்பாடுகள் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன் சொந்த வாக்குவங்கி படிப்படியாக வீழ்ச்சியடைவது முன்னேற்றமான ஒரு அரசியல் அமைப்பின் நிலையைப் பற்றி எடுத்துரைக்கவில்லை. எனவே கட்சிக்குள் மாற்றம் செய்யவேண்டியது கட்டாயமான ஒன்று, மற்றும் எந்த ஒரு நபர் அல்லது நிறுவனம் அத்தகைய ஒரு மாற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், அது கட்சி மற்றும் அதன் வரலாறு என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகும். எனினும் ஐதேகவின் தலைவர்கள் இன்று எதிர்கொள்ளவிருப்பது ஒரு இருமைத் தெரிவு அல்ல. எது கறுப்பு மற்றும் எது வெள்ளை என்பதற்கு இடையில் பரந்த அளவு வித்தியாசம் உள்ளது. அதன் நடுவில் உள்ள நிழல்களை தேவையானது மற்றும் தேவையற்றது என்று புறக்கணிப்பு செய்யமுடியாது. அடிப்படையில் அரசியல் நிழலில்தான் வாழ்கிறது. அந்த நிழல்களின் சாயை ஆழந்த மனங்களில் காணப்படும் கண்ணுக்குத் தெரியாத பரந்த அளவிலான விருப்பங்களாகும். ஆனால் வாக்காளர் அத்தகை நிழல்களைப்பற்றி எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அத்தகைய அறிவார்ந்த வாக்காளர்களை அலட்சியப்படுத்துவதை தேர்ந்தெடுப்பவர் ஒரு இழிவான அரசியல்வாதியாகவே இருப்பார். இன்றைய வாக்காளர் தவறு செய்கிறார் என்று சொல்வது முற்றிலும் அபத்தமானது. சந்தை விதிகளின்படி “வாடிக்கையாளர் எப்போதும் சரி” என்கிற ஒருவிதி உள்ளது, வாடிக்கையாளரை தவறானவர் என்று முத்திரையிடுவது ஒவ்வொரு வாக்கெடுப்பு வட்டத்தின் போதும் அவர்களது வாக்குகளை கோருபவர்களுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.
நெருக்கடிகள் வரும், போகும், இருந்தும் மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது அதிலிருந்து எப்படித் தப்பித்து உயிர்வாழ்வது என்பதை மட்டும்தான், அவன் மேலும் கற்றுக்கொள்ள வேண்டியது நெருக்கடி அனைத்தையும் அழித்துவிடும் பேரழிவு என்று கருதுவதற்கு மாறாக அதை எப்படி ஒரு நட்பான சவாலாக மாற்றுவது என்பதை. ஐதேகவின் நெருக்கடியான நேரம் வந்துள்ளது. விஷயத்தின் முடிவில் அது இரத்தம் தோய்ந்ததாகவும் மற்றும் முற்றிலும் சோர்வடைந்ததாகவும் காணப்படும் ஆனால் அது இன்னமும் நின்றுகொண்டுதான் உள்ளது.

SHARE

Author: verified_user