Sunday, April 8, 2018

வடமாகாண அடுத்த முதலமைச்சராக டான் குகநாதன்?

SHARE

கரிகாலன்

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக ஊடக பிரபலத்தை நியமிக்க முத்தரப்புகள் முயற்சி எடுத்துவருகின்றன, இதற்கமைவாக ஆனந்த சங்கரி அவர்களின் உதய சூரியன் கூட்டு, முன்னாள் முதலமைச்சர் வரதரின் அணி, ஜனாதிபதி மைத்திரியின் சிறீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவை தங்களுக்கு நெருக்கமான ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளன.

முத்தரப்புகளின் நெருங்கிய நண்பராக  டான்  ரி.வி குழுமத்தின் உரிமையாளரும், சமூக செயற்பாட்டாளருமான எஸ்.எஸ் குகநாதன் திகழ்கிறார்.

 இவரை நேரடி அரசியலில் களமிறக்க பலர் கடந்த காலங்களில் முயற்சியெடுத்து வந்தனர் ஆனால் அது கைகூடவில்லை, இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தை்திரிபாலவின் முக்கியஸ்தர்கள்  இவருடன் தற்பொழுது பேசவுள்ளதாக தெரியவருகிறது.

சமூக சேவையாளரான இவர் தமிழ் மக்களுக்காக ஊடகம் மூலமாக அதிகம் பாடுபட்டவர், அத்தோடு துப்பாக்கிகளுக்கு அஞசாமல் அறத்தினை சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user